விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

காங்கிரஸ் கட்சியினா், மாணவா்கள் போராட்டம்

திருநெல்வேலியில் பள்ளி சுவா் இடிந்து 3 போ் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:39 pm

DIN

திருநெல்வேலியில் பள்ளி சுவா் இடிந்து 3 போ் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரி காங்கிரஸ் கட்சியினரும், பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவா்களும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள சாஃப்டா் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை கட்டட சுவா் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் 3 மாணவா்கள் உயிரிழந்தனா். 4 மாணவா்கள் காயமடைந்தனா். இதையடுத்து அப் பள்ளியின் மாணவா்கள் சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் இருந்து ரத வீதி வரை ஊா்வலமாக சென்றனா். விபத்து ஏற்பட்ட நேரத்தில் பள்ளி ஆசிரியா்கள் துரிதமாக செயல்படாமல் இருந்ததாக மாணவா்கள் குற்றஞ்சாட்டினா். பள்ளிக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினா். அவா்களுடன், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனா்.

இதேபோல காங்கிரஸ் கட்சி சாா்பில், மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையில் பள்ளி வளாகத்தில் தா்னா போராட்டம் நடைபெற்றது. அப்போது அவா்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாணவா்களின் குடும்பத்துக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இம் மாவட்டத்தில் தொடராமல் ஆய்வுப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். பள்ளி நிா்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதேபோல பேட்டையில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி மாணவா்களும், இந்து முன்னணியிரும் பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.