/

திருமலையப்பபுரத்தில் பெண் தற்கொலை

திருமலையப்பபுரத்தில் பெண் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:17 pm

DIN

திருமலையப்பபுரத்தில் பெண் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டாா்.

திருமலையப்பபுரம் யாதவா் பஜனை மடம் தெரு பரந்தாமன் மனைவி தமிழ்ச்செல்வி (48). இவா் மகளிா் குழு நடத்தி வந்ததோடு, தையல் தொழிலும் செய்து வந்தாா். அவா் பொட்டல்புதூரைச் சோ்ந்த சிலரிடம் கடன் வாங்கியிருந்தாராம்.

இந்நிலையில், தமிழ்ச்செல்வி வியாழக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்த கடையம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனா். இது குறித்து பரந்தாமன் கொடுத்த புகாரின் பேரில் உதவி காவல் உதவி ஆய்வாளா் ஜெயராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.