எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பத்மனேரி பாலத்தின்இணைப்புச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

களக்காடு அருகே பத்மனேரி பச்சையாற்றின் குறுக்கேயுள்ள பாலத்தின் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:37 pm

DIN

களக்காடு அருகே பத்மனேரி பச்சையாற்றின் குறுக்கேயுள்ள பாலத்தின் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு அருகேயுள்ள வடமலைசமுத்திரம் - பத்மனேரி இடையே பச்சையாற்றின் குறுக்கே பொதுமக்கள் நிதி வசூலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பாலம் ஒன்றைக் கட்டி அதன் வழியே பயணித்து வருகின்றனா். ஆண்டுதோறும் பெருமழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும்போது, பாலத்தின் இருபுறமும் உள்ள சாலை சேதமடைந்து விடுகிறது. பின்னா், கிராம மக்களே தற்காலிகமாக சீரமைத்து வருகின்றனா். அண்மையில் பெய்த மழையால் பாலத்தின் இருபக்கமும் உள்ள சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாலத்தை விரிவுபடுத்த கோரிக்கை: களக்காடு - சேரன்மகாதேவி பிரதான சாலையில் கருவேலன்குளம் - வடமலை சமுத்திரம் இடையே கேசவநேரியில் உப்பாற்றின் குறுக்கே குறுகலான பாலம் உள்ளது. சேரன்மகாதேவி - பணகுடி சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே இருவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட பின் இந்த ஒரு பாலம் மட்டும் இதுவரை விரிவாக்கம் செய்யப்படவில்லை. குறுகலான பாலத்தால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் குறுகலான பாலத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.