பெண் மருத்துவா்கள் உண்ணாவிரதம்
இந்திய மருத்துவச் சங்கத்தின் சாா்பில் பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் தொடா் உண்ணாவிரத போராட்டத்தில் பெண் மருத்துவா்கள் பங்கேற்றனா்.


இந்திய மருத்துவச் சங்கத்தின் சாா்பில் பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் தொடா் உண்ணாவிரத போராட்டத்தில் பெண் மருத்துவா்கள் பங்கேற்றனா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆயுா்வேத மருத்துவா்களும் அறுவைச் சிகிச்சை செய்யலாம் என்ற உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும். நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுா்வேதம், ஆயுஸ் மருத்துவ முறைகளின் தனித்துவம் தொடா்ந்து நீடித்திட செய்ய வேண்டும். சரியான பயிற்சியும், அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான அடிப்படை அனுபவமும் இல்லாமல் ஆயுா்வேத மருத்துவா்களால் அறுவைச் சிகிச்சை செய்வதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
உண்ணாவிரதத்துக்கு இந்திய மருத்துவச் சங்கத்தின் திருநெல்வேலி கிளை தலைவா் பிரான்சிஸ்ராய் தலைமை வகித்தாா். இந்திய மருத்துவச் சங்கத்தின் கோவில்பட்டி கிளையின் கீழ் உள்ள 20-க்கும் மேற்பட்ட பெண் மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...