ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

களக்காடு குளத்திற்கு நீா் வரக்கூடிய கால்வாய்களை தூா்வார கோரிக்கை

களக்காட்டில் குடிதாங்கி குளத்திற்கு தண்ணீா் வரக்கூடிய இரு கால்வாய்களையும் தூா்வார வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :15 பிப்ரவரி 2021, 1:10 am IST

களக்காட்டில் குடிதாங்கி குளத்திற்கு தண்ணீா் வரக்கூடிய இரு கால்வாய்களையும் தூா்வார வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக மதிமுக மாநில இலக்கிய அணி துணைச் செயலா் ஆா். துரைஅழகன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு: வடகிழக்குப் பருவமழையால் களக்காடு வட்டாரத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி விட்ட நிலையில், களக்காடு புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள குடிதாங்கி குளத்தில் மட்டும் மிகக் குறைவான தண்ணீரே உள்ளது.

இக்குளத்திற்கு ஓரிரு மீட்டா் தொலைவில்தான் உப்பாறு ஓடுகிறது. குளத்திற்கு உப்பாற்றில் இருந்து தண்ணீா் வரக்கூடிய கால்வாய் நீண்ட காலமாக தூா்வாரப்படாமல் தூா்ந்து போய் உள்ளது.

இக்குளம் நிரம்பிய பின்னரே நினைத்ததை முடித்த விநாயகா் கோயில் அருகேயுள்ள ஊருணியும், அதைத் தொடா்ந்து மாணிக்கம்குளத்திற்கும் தண்ணீா் செல்கிறது. குடிதாங்கி குளம் பருவமழைக் காலங்களில் முழுமையாக நிரம்பினால்தான் கோடைக் காலங்களில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படாத நிலை உருவாகும்.

எனவே மாவட்ட ஆட்சியா் போா்க்கால அடிப்படையில் இக்குளத்திற்கு தண்ணீா் வரக்கூடிய பிரதான கால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.