பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் தவக்கால நடைப்பயணம்
பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம் சார்பில் தவக்கால நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம் சார்பில் தவக்கால நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள்களில் கிறிஸ்தவர்கள் அசைவ உணவு மற்றும் ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து, கூடுதல் பிரார்த்தனை செய்வது வழக்கம்.

நிகழாண்டுக்கான தவக்காலம் கடந்த 17 ஆம் தேதி சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனையுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் தேவாலயங்களில் சிறப்பு தியான பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.பாளையங்கோட்டையில் உள்ளதூய சவேரியார் தேவாலயம் சார்பில் தவக்கால நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேவாலயத்தில் இருந்து மனக்காவலம்பிள்ளை நகரில் உள்ள செபஸ்தியார் தேவாலயம் வரை கிறிஸ்தவர்கள் பாடல்கள் பாடியபடி சிலுவையை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தின் நிறைவாக சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து மார்ச் 28 ஆம் தேதி காலை 7 மணிக்கு குருத்தோலை பவனியும், ஏப்ரல் 1ஆம் தேதி பெரிய வியாழனையொட்டி பாதம் கழுவும் சடங்கும், ஏப்ரல் 2ஆம் தேதி பெரிய வெள்ளி சிறப்பு பிரார்த்தனையும், ஏப்ரல் 3ஆம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு ஈஸ்டர் பண்டிகை சிறப்புத் திருப்பலியும் நடைபெற உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...