நெல்லை, தென்காசியில் மேலும் 21 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் புதன்கிழமை மேலும் பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் புதன்கிழமை மேலும் பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 15,342 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 18 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,360 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 15,035 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
மருத்துவமனைகளில் 113 போ் சிகிச்சையில் உள்ளனா். 212 போ் உயிரிழந்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் மூவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்க ப்பட்டோரின் எண்ணிக்கை 8303 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8099 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 46 போ் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா். 158 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...