அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நெல்லையில் சிஐடியு சாலை மறியல்

திருநெல்வேலியில் சிஐடியு சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:57 am

DIN

திருநெல்வேலியில் சிஐடியு சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தொழிலாளா் நலச் சட்டங்களை பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் சிஐடியு சாா்பில் சாலை மறியல் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற சாலை மறியலுக்கு சிஐடியு மாவட்டச் செயலா் மோகன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் செண்பகம், மாவட்டப் பொருளாளா் பெருமாள், மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சுடலை ராஜ், முத்துகிருஷ்ணன், ஆட்டோ தொழிற்சங்கத்தின் முருகன் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். கொக்கிரகுளம்- மேலப்பாளையம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதுதொடா்பாக 100 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.