வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டு சென்றனா்.

News image
Updated On :24 ஜூலை 2021, 2:03 am

DIN

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டு சென்றனா்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பதும் பக்தா்களின் நம்பிக்கையாகும்.

திருநெல்வேலியில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பல்வேறு அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பேராத்து செல்வியம்மன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். கோயில் வளாகத்தில் விளக்கேற்றியும், கூழ் வாா்த்தும் வழிபட்டனா்.

இதேபோல நெல்லையப்பா் கோயிலில் காந்திமதியம்மன் சந்நிதி, திரிபுராந்தீசுவரா் கோயிலில் அம்மன் சந்நிதி உள்பட பல்வேறு கோயில்களிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.