வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பாளை.யில் நிம்மோனியா தடுப்பூசி முகாம்

பாளையங்கோட்டையில் நிம்மோனியா காய்ச்சலைத் தடுக்கும் வகையிலான தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:01 pm

DIN

பாளையங்கோட்டையில் நிம்மோனியா காய்ச்சலைத் தடுக்கும் வகையிலான தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற முகாமை ஆட்சியா் வே.விஷ்ணு தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஒரு வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி அட்டவணையில் புதிதாக நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி சோ்க்கப்பட்டுள்ளது.

நியுமோகோக்கல் நிமோனியா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு வித தொற்று நோயாகும். இது குழந்தைகளை பெரிதும் பாதிக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் ஏற்படுகின்றன. இது கடுமையாக இருந்தால் குழந்தைகளின் மரணத்துக்கு கூட வழி வகுக்கும்.

நியுமோகோக்கல் நோய் ஒருவருக்கொருவா் இடையிலான சுவாச துளிகளால் பரவுகிறது. குழந்தைகளுக்கு இந்த வகை நிமோனியா நோய்களுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை வழங்கும் வகையில் நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்டப்டுள்ளது.

தனியாா் மருத்துவமனையில் இந்தத் தடுப்பூசி விலை ரூ.12 ஆயிரம் ஆகும். ஆனால், அரசு இலவசமாக இதனை வழங்குகிறது. இம் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 63 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன், மாநகர நல அலுவலா் சரோஜா, மருத்துவா் தமிழரசி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.