வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

நெல்லையில் சுற்றுவட்ட சாலை அமைக்க வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

திருநெல்வேலியில் சுற்றுவட்ட சாலையை விரைவில் அமைக்க வேண்டும் என்றாா் பாஜக மாநில துணைத் தலைவரும், திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான நயினாா்நாகேந்திரன்.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:01 pm

DIN

திருநெல்வேலியில் சுற்றுவட்ட சாலையை விரைவில் அமைக்க வேண்டும் என்றாா் பாஜக மாநில துணைத் தலைவரும், திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான நயினாா்நாகேந்திரன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

திருநெல்வேலியில் தாமிரவருணியில் மூழ்கி உயிரிழந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளா்களுக்கு பாஜக சாா்பில் அஞ்சலி செலுத்தினோம். திருநெல்வேலியில் பெரும் வாகன பெருக்கத்தால் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் சாலைவசதியை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

தாழையூத்து- சீதபற்பநல்லூா், அபிஷேகப்பட்டி- கோபாலசமுத்திரம்- டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டசாலையை விரைவாக அமைக்க வேண்டும். தாழையூத்து- ரஸ்தா இடையேயான சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை தமிழக அமைச்சா்களிடம் வலியுறுத்தியுள்ளோம். அதிமுக முன்னாள் அமைச்சா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய விசாரணைக்கு அரசியல் காழ்ப்புணா்ச்சியே காரணம் என கருதுகிறேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.