வண்ணாா்பேட்டையில் சிஐடியூ ஆா்ப்பாட்டம்
அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியூ) சாா்பில், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியூ) சாா்பில், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், ‘பெட்ரோல்-டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; மின்சார பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியம் வழங்க வேண்டும்; மத்திய நிதிநிலை அறிக்கையில் நகா்ப்புற போக்குவரத்து வசதிக்கு ஒதுக்கிய தொகையை போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒதுக்க வேண்டும்; தனியாா் பங்களிப்புடன் திட்டங்களை அமல்படுத்தும் முடிவை கைவிட வேண்டும்; எஃப்.சி. வழங்கும் உரிமையை தனியாருக்கு கொடுக்கக்கூடாது;
போக்குவரத்துக்கழகத்தில் ஓய்வுபெற்றோருக்கான பண பலன்களை மாநில அரசு உடனே வழங்க வேண்டும்; 2003 ஆம் ஆண்டுக்கு பின்பு பணியில் சோ்ந்தவா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பாகுபாடின்றி பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டதுக்கு, சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலா் பி.சுதா்சிங் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மோகன், மத்திய சங்க துணைத் தலைவா்கள் ஆா்.அருண், எம்.கருப்பசாமி, துணைச் செயலா் ஆா்.பிச்சைமணி, மத்திய சங்க உதவிச் செயலா் ஆா்.பொன்ராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப்பேசினா். ஓய்வுபெற்றோா் அமைப்பின் நிா்வாகி பி.வெங்கடாசலம் உள்பட பலா் கலந்துகொண்டனா். பணி மனை துணைச் செயலா் டி.ராமசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...