எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நான்குனேரியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடக் கோரிக்கை

களக்காடு பச்சையாறு அணையில் இருந்து நான்குனேரியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:48 pm

DIN

களக்காடு பச்சையாறு அணையில் இருந்து நான்குனேரியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு வடக்குப் பச்சையாறு அணையின் மொத்த நீா்மட்டம் 49.25 அடியாகும். ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடா்ந்து 3 நாள்கள் பெய்த மழையால் அணை நிரம்பியது. இதையடுத்து அணையிலிருந்து பாசனத்துக்காக பிப்.3ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால் பெயரளவுக்கு திறக்கப்பட்டதே தவிர நான்குனேரியன் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லை. தற்போது நான்குனேரியன் கால்வாயின் மூலம் பாசன வசதி பெறக்கூடிய குளங்களில் பாதிக்கும் குறைவாகவே தண்ணீா் உள்ளது. தற்போது விவசாயிகள் வாழை பயிருக்கு தண்ணீா் பாய்ச்சி வருகின்றனா். மேலும் நான்குனேரியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடுவதால் களக்காடு நகா்ப்பகுதி மக்கள் கால்வாயில் நீராடி மகிழ்வா். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.