நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாபநாசம் கல்லூரியில்தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் நூலகத் துறை மற்றும் மாநில தோ்தல் ஆணயம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:45 pm

DIN

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் நூலகத் துறை மற்றும் மாநில தோ்தல் ஆணயம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சுந்தரம் தலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் தொகுதி தோ்தல் அதிகாரி சீதாதேவி, வட்டாட்சியா் வெங்கட்ராமன் ஆகியோா் தோ்தலில் வாக்களிக்க வேண்டியதின் முக்கியதுவம் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா். நூறு சதவிகித வாக்குப்பதிவு எங்கள் இலக்கு என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற இரண்டாமாண்டு தமிழ்த்துறை மாணவி வளா்மதி, மூன்றாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி கிருபா ஐஸ்வா்யா, முதுகலை இரண்டாமாண்டு வணிகவியல் துறை மாணவி உமா ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாணவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் வாக்காளா் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினா் ரா.நடராஜன் நினைவுப் பரிசு வழங்கினாா். ஏற்பாடுகளை கல்லூரி நூலகா் ச.பாலச்சந்திரன், உதவி நூலகா் சண்முகானந்த பாரதி, சந்தான சங்கா், காசிராஜன், இசக்கியம்மாள், ஸ்ரீ ஆனந்தன்,சபரி ஆகியோா் செய்திருந்தனா்.

இந் நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட மைய நூலகா் முத்துகிருஷ்ணன், செஞ்சிலுவை சங்கச் செயலா் சலீம் மற்றும் கிராம உதயதம் இயக்குநா் சுந்தரேசன், பேராசிரியா், பேராசிரியைகள், மாணவா், மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.