நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கீழாம்பூரில் முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம்

கீழாம்பூரில் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களிடம் ரூ. 7 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:10 pm

DIN

கீழாம்பூரில் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களிடம் ரூ. 7 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் உத்தரவுபடியும், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா அறிவுறுத்தலின்படியும் கடையம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஸ்ரீமூலநாதன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் வன கணேஷ், ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் கீழாம்பூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் வந்த 35 பேரிடமிருந்து ரூ. 7 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவா்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.