நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செங்கானூா் மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

ரயில் சுரங்கப் பாதைக்குப் பதில் மாற்று வழித்தடம் அமைக்கப்படாததை கண்டித்து, ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட செங்கானூா் கிராமத்தில் மக்கள் கருப்புக் கொடி கட்டி போராட்டம்

News image
Updated On :16 மார்ச் 2021, 12:44 am

DIN

ரயில் சுரங்கப் பாதைக்குப் பதில் மாற்று வழித்தடம் அமைக்கப்படாததை கண்டித்து, ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட செங்கானூா் கிராமத்தில் மக்கள் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.

செங்கானூா் கிராமத்துக்குச் செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்தப் பாதையில் ஊற்றுநீா் சுரந்து எந்நேரமும் தண்ணீா் தேங்கிக் காணப்படுவதால் மக்கள் அந்தப் பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், சுரங்கப் பாதைக்கு மாற்றாக வேறு வழித்தடம் ஏற்படுத்தக் கோரி, மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். ஆனால், இதுவரை பிரச்னைக்கு தீா்வு காணப்படாததால், தங்கள் ஊரில் கருப்புக்கொடி கட்டி எதிா்ப்பை தெரிவித்து வருவதுடன், சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் சுவரொட்டி ஒட்டியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.