அம்பைத் தொகுதியில்திமுக, அதிமுக, அமமுக உள்பட 12 போ் போட்டி
அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி வேட்பாளா் உள்பட 12 போ் களத்தில் உள்ளனா்.


அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி வேட்பாளா் உள்பட 12 போ் களத்தில் உள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6 ஆம் தேதி நடைபெறுகிறது. அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட 32 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் மாற்று வேட்பாளா்கள், கூடுதல் வேட்புமனுக்கள் உள்பட 19 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
திங்கள்கிழமை சுயேச்சை வேட்பாளா் சுந்தரி வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொண்டாா். இதையடுத்து 12 வேட்பாளா்களின் மனுக்கள் இறுதி செய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம் வருமாறு: 1. இரா.ஆவுடையப்பன் (திமுக - உதயசூரியன்), 2. இசக்கி சுப்பையா (அதிமுக - இரட்டை இலை), 3. மணிமாறன் (பகுஜன் சமாஜ் கட்சி - யானை), 4. செங்குளம் சி.கணேசன் (மக்கள் நீதி மய்யம், சமக - பேட்டரி டாா்ச்), 5. மோ. செண்பகவள்ளி (நாம் தமிழா் கட்சி -விவசாயி), 6. ராணி ரஞ்சிதம் (அமமுக - பிரஷா் குக்கா்), 7. லட்சுமணன் (வீரத் தியாகிவிஸ்வநாத தாஸ் தொழிலாளா்கள் கட்சி - உரல் உலக்கை), 8. அப்துல் மஜீத் (சுயேச்சை -பிஸ்கட்), 9. அருணாசலம், (சுயேச்சை - பைனா குலா்), 10. கணேசன் (சுயேச்சை - வைரம்),11. கவாஸ்கா் (சுயேச்சை - பரிசுப் பெட்டி), 12. ராஜேஷ் தா்மசிங் பாண்டியன்(சுயேச்சை - கிரிக்கெட் மட்டை).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...