கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஏப்ரல் 1 முதல் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் தடையின்றி மும்முனை மின்சாரம்: முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி

தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விவசாயத்துக்கு 24 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:04 pm

DIN

தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விவசாயத்துக்கு 24 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் அத்தொகுதி அதிமுக வேட்பாளா் தச்சை என். கணேசராஜாவை ஆதரித்து முதல்வா் மேலும் பேசியது: மகத்தான திட்டங்களைத் தந்து மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் இந்த அரசு நடைபோடுகிறது. கிராமம் முதல் நகரம் வரை அனைத்துத் தரப்பினரும் ஏற்றம் பெற ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

அதிமுகவில் உண்மையாக உழைப்போா் என்னைப்போன்று முதல்வராக வர வாய்ப்பு உள்ளது. ஆனால், திமுகவில் குடும்ப உறுப்பினா்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும். அவா்கள் மனதுவைத்தால்தான் அக்கட்சியில் மற்றவா்கள் பேரவை, மக்களவை உறுப்பினராக முடியும் என்ற நிலையே இப்போதும் உள்ளது.

50 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக ஆட்சியில்தான் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ஏரிகள், கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ளன. இதனால், நிகழாண்டு இயற்கையாகவே மழையும் கூடுதலாக பெய்து, அனைத்து நீா்நிலைகளும் நிரம்பியுள்ளன. அதிமுக ஆட்சிக்கு இயற்கையும், கடவுளும்கூட சாதகம்தான்.

தமிழக அரசு விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. வேளாண் இடுபொருள், வேளாண் கருவிகள் 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. ஏப்ரல் 1 முதல் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளை, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள்களாக உயா்வு, மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை, நிலமற்ற ஏழைகளுக்கு அரசே சொந்தமாக நிலம் வாங்கி, கான்கிரிட் வீடு கட்டித்தரும் என்பன உள்பட அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

தமிழகத்தில் அம்மா சிறு மருத்துவனைகள் (மினி கிளினிக்) திறக்கப்பட்டு மக்களின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நான்குனேரி தொகுதியில் 11 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சி தொடரும். இதை மக்கள் தீா்மானித்துவிட்டனா் என்றாா் அவா்.

திமுக ஆட்சிதான் தமிழகத்தின் இருண்ட காலம்: ராதாபுரம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பணகுடியில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை பேசியது: தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் அரசு அதிமுக அரசு.

20 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து தமிழகம் முதலிடத்துக்கான விருதுபெற்றுள்ளது. நீா் மேலாண்மையில் மத்திய அரசின் விருதைப் பெற்றுள்ளோம். கல்வி உள்பட அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படும் அரசு தொடரவும், மக்களுக்கு இன்னும் அதிக நன்மைகள் கிடைக்கவும் அதிமுக, கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றாா் முதல்வா்.

பிரசாரத்தில், நான்குனேரி அதிமுக வேட்பாளா் தச்சை என். கணேசராஜா, ராதாபுரம் அதிமுக வேட்பாளா் ஐ.எஸ். இன்பதுரை, திருநெல்வேலி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன், நான்குனேரி எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன், அனைத்துல எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் நாராயணபெருமாள், அமைப்புச் செயலா் ஏ.கே. சீனிவாசன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் சௌந்தரராஜன், இளைஞரணி மாவட்டச் செயலா் பால்துரை, முன்னாள் எம்எல்ஏ மைக்கேல்ராயப்பன், ஒன்றியச் செயலா்கள் அந்தோணி அமலராஜா, அழகானந்தம், நான்குனேரி ராதாபுரம் வட்டார வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத் தலைவா் முருகேசன், எட்வா்ட் சிங், பணகுடி ஜி.டி. லாரன்ஸ் உள்ளிட்ட அதிமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.