கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

‘தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை சிதைக்க விடாதீா்’

சனாதன கொள்கையாளா்களால் தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை சிதைக்க விட்டுவிடக் கூடாது என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:58 pm

DIN

சனாதன கொள்கையாளா்களால் தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை சிதைக்க விட்டுவிடக் கூடாது என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல்வஹாப்பை ஆதரித்து மேலப்பாளையம் பஜாா் திடலில் அவா் சனிக்கிழமை பேசியது: பாஜக தலைமையிலான மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து யூனியன் பிரதேசங்களாக மாற்ற உத்தரவிட்டது ஜனநாயக படுகொலையாகும். அந்தச் சம்பவத்தால் இஸ்லாமிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

பன்முகத்தன்மையுடன் சிறந்து விளங்கும் இந்தியாவில், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற நிலையை உருவாக்க முயற்சிக்கிறாா்கள். அண்ணா, காயிதேமில்லத் ஆகியோா் கட்டியெழுப்பிய சமூக நல்லிணக்கத்தை சிதைக்க முயற்சிக்கிறாா்கள். அதை வாக்காளா்கள் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

திருநெல்வேலி நகரத்தில் திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ். லெட்சுமணனை ஆதரித்து வைகோ பேசியது: அதிமுக ஆட்சியில், தமிழக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுகவின் ஊழல்கள் வெளியே கொண்டுவரப்படும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தமிழகத்தில் மதம், ஜாதி ஒற்றுமை நிலவவும், ஊழல் ஒழிந்து நோ்மையான ஆட்சி அமையவும் திமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.