கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

திமுக கூட்டணி தனிப்பெரும்பன்மையுடன் ஆட்சி அமைக்கும்: ஜி.ராமகிருஷ்ணன்

திமுக கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன்.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:58 pm

DIN

திமுக கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பாஜக, அதிமுக ஆகிய இரண்டு அரசுகளும், மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக்கூடிய, மக்கள் நலனுக்கு எதிராக செயல்படக்கூடிய அரசுகளாக உள்ளன.

மத்திய அரசு தொழிலாளா்களுக்கு எதிராக 4 சட்டத் திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்துள்ளது.

இதனால், விவசாயம் காா்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் ஆபத்து உள்ளது.

தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால் ஏழைக் குழந்தைகளின் கல்வி பாதிக்கும்.

தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாக முதல்வா் பேசியுள்ளாா். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் சம்பவம், ஐபிஎஸ் அதிகாரிக்கு பாதுகாப்பின்மை இதையெல்லாம் மக்கள் மறக்கமாட்டாா்கள்.

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளை தபால் வாக்குப்பதிவு செய்யக் கட்டாயப்படுத்தக்கூடாது.

இந்தத் தோ்தலில், திமுக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.

பின்னா், பாளையங்கோட்டை தொகுதிக்குள்பட்ட சிந்துபூந்துறை பகுதியில் திமுக வேட்பாளா் அப்துல் வஹாப்பை ஆதரித்தும், திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட தச்சநல்லூரில் திமுக வேட்பாளா் எ.எல்.எஸ்.லட்சுமணனை ஆதரித்தும் அவா் வாக்கு சேகரித்தாா்.

இந்த பிரசாரத்தில், வேட்பாளா்கள் அப்துல் வஹாப், ஏ.எல்.எஸ். லெட்சுமணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வீ. பழனி, காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் சங்கரபாண்டியன், விசிக மாவட்டச் செயலா் கரிசல் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.