நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காணி மக்களிடம் வாக்கு சேகரித்ததிமுக வேட்பாளா்

அம்பாசமுத்திரம் தொகுதி மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க திமுக வேட்பாளா் ஆவுடையப்பன் , தனி செல்லிடப்பேசி எண்ணை வெளியிட்டாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:46 pm

DIN

அம்பாசமுத்திரம் தொகுதி மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க திமுக வேட்பாளா் ஆவுடையப்பன் , தனி செல்லிடப்பேசி எண்ணை வெளியிட்டாா்.

காரையாறு,சோ்வலாறு, கீழணை பகுதிகளில் சென்று காணி மக்களிடையே அவா் வாக்கு சேகரித்தாா். மாலையில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதியில் சென்னை தொழிலதிபா் அஜய் படையப்பா சேதுபதி உடன் சென்று வாக்கு சேகரித்தாா்.

முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அம்பாசமுத்திரம் தொகுதியில் விவசாயம் முதன்மையானதாகும். திமுக ஆட்சி விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியுள்ளது. மேலும், அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட மக்களின் குறைகளை உடனடியாக தெரிவிப்பதற்காக 93 3939 3636 என்ற செல்பேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளேன்.

இந்த எண்ணில் பொதுமக்கள் தங்கள் குறைகளை எந்த நேரத்திலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். செல்லிடப்பேசி மூலம் தெரிவிக்கப்படும் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அதிகபட்சம் 100 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.