/

மாஞ்சோலையில் லாரி கவிழ்ந்து 10 போ் காயம்

மாஞ்சோலை மலைச்சாலையில் லாரி கவிழ்ந்து பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

News image
Updated On :21 மே 2021, 8:05 pm

DIN

மாஞ்சோலை மலைச்சாலையில் லாரி கவிழ்ந்து பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

கோதையாறில் உள்ள மின் உற்பத்தி நிலையத்திலிருந்து சங்கா் நகருக்கு மின்பாதை புதிய கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. பழைய கம்பிகளைஅகற்றி லாரியில் ஏற்றிக்கொண்டு ஒப்பந்தப் பணியாளா்களுடன் லாரி திரும்பி வந்து திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது மூனு முடங்கி என்ற இடத்தில் லாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் காயமடைந்தனா். தகவலறிந்த அம்பை டிஎஸ்பி பிரான்சிஸ், கல்லிடைக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் மற்றும் போலீஸாா், அம்பாசமுத்திரம் தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பினா். மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.