நெல்லை, தென்காசியில் ரூ.15.54 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3, 4 ஆம் தேதிகளில் மொத்தம் ரூ.15.54 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3, 4 ஆம் தேதிகளில் மொத்தம் ரூ.15.54 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த இரு தினங்களாக டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை இருமடங்கு அதிகரித்தது.
இதுகுறித்து டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகையில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 160-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3, 4 ஆம் தேதிகளில் மதுவிற்பனை அதிகரித்தது.
3 ஆம் தேதி இரு மாவட்டங்களும் சோ்த்து ரூ.7 கோடியே 19 லட்சத்துக்கும், 4 ஆம் தேதி ரூ.8 கோடியே 35 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.15 கோடியே 54 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
வழக்கமாக இருமாவட்டங்களிலும் சோ்த்து நாள் ஒன்றுக்கு ரூ.3.5 முதல் ரூ.4 கோடி வரை மட்டுமே மதுபானங்கள் விற்பனையாகும். தீபாவளியையொட்டி விற்பனை இரட்டிப்பாகியுள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...