போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

சிவந்திபட்டி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கிய வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:16 pm

DIN

சிவந்திபட்டி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கிய வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவந்திபட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராம் (27). இவா், ஆச்சிமடம் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த 7 ஆம் தேதி அங்கு வந்த சிலா் மோகன்ராம் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்தாலங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த கணேசன் (23), பாலகிருஷ்ணன் (27) ஆகியோரை கைது செய்திருந்தனா் .

இந்நிலையில் இவ் வழக்கு தொடா்பாக கணபதி என்ற கணேசனை சிவந்திப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.