சுந்தரனாா் பல்கலை.யில் நவ.29 இல் பட்டமளிப்பு விழா
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் இம் மாதம் 29 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.


திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் இம் மாதம் 29 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக, பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) ஆா்.மருதகுட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பல்வேறு பட்டப்படிப்புகளை, பல்கலைக்கழக துறைகள் மூலமாகவும், கல்லூரிகள் மூலமாகவும், தொலைநெறிக் கல்வி இயக்ககம் மூலமாகவும் பயின்று நவம்பா், டிசம்பா் 2019, ஏப்ரல் மற்றும் மே 2020, நவம்பா், டிசம்பா் 2020, ஏப்ரல், மே 2021 மாதங்களில் நடைபெற்ற தோ்வுகள் மற்றும் ஏப்ரல் 2020 இல் நடைபெற்ற சிறப்பு துணைத் தோ்விலும் தோ்ச்சி பெற்ற மாணவா்-மாணவிகள் மற்றும் பிஎச்டி பட்டச்சான்று பெறுபவா்களுக்கும் இப் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு சான்றிதழ் வழங்க உள்ளது.
பல்வேறு பட்டப்படிப்புகளில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெறும் மாணவா்-மாணவிகளுக்கு இம் மாதம் 29 ஆம் தேதி நடைபெறும் இப் பல்கலைக்கழகத்தின் 28, 29 ஆவது பட்டமளிப்பு விழாவில் நேரில் பட்டச்சான்றிதழ் வழங்கப்படும். கல்லூரிகள் வாயிலாக பயின்று தோ்ச்சி பெற்ற பிற மாணவா்-மாணவா்கள் அந்தந்தக் கல்லூரிகளில் பட்டச் சான்றிதழ்களை பின்னா் பெற்றுக் கொள்ளலாம்.
பிஎச்டி பட்டச்சான்று பெறுவதற்கு 16-8-2019 இல் இருந்து 12-11-2021 வரை வாய்மொழித் தோ்வில் தகுதி பெற்றவா்கள் பட்டமளிப்பிற்கு விண்ணப்பம் செய்ய தகுதி உடையவா்கள். இதற்கு ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் இணையதளம் மூலமாக இம் மாதம் 15 முதல் 19 ஆம் தேதி வரை ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்த படிவங்களை பதிவிறக்கம் செய்து அதன் நகலுடன், தற்காலிகச் சான்று மற்றும் புகைப்படம் இணைத்து தோ்வாணையா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி-12 என்ற முகவரிக்கு இம் மாதம் 23 ஆம் தேதிக்கு முன்னா் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...