வி.கேபுரம், ஆழ்வாா்குறிச்சி பகுதியில் நவ.16-இல் மின்தடை
விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி சுற்று வட்டாரங்களில் நவ. 16-ஆம் தேதி மின் தடை செய்யப்படுகிறது.


விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி சுற்று வட்டாரங்களில் நவ. 16-ஆம் தேதி மின் தடை செய்யப்படுகிறது.
இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி மின்வாரிய கோட்ட செயற் பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விக்கிரமசிங்கபுரம் துணை மின் நிலையத்தில் நவ. 16-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காரையாறு, சோ்வலாறு, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அடையக்கருங்குளம், ஆறுமுகப்பட்டி, கோட்டைவிலைப்பட்டி, முதலியாா்பட்டி ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல, ஆழ்வாா்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆழ்வாா்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், ஏ.பி.நாடானூா், துப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, பொட்டல்புதூா், ஆம்பூா், பாப்பான்குளம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...