/

அம்பை ஒன்றியக்குழு கூட்டம்

அம்பாசமுத்திரம் ஒன்றியக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

அம்பாசமுத்திரம் ஒன்றியக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் சிவனுப்பாண்டியன் என்ற பரணிசேகா் தலைமை வகித்தாா். ஆணையாளா் குமரன், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜய செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான சமுதாய நலக்கூடம் சீரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். குளங்கள் தூா்வாரவும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கான கட்டடங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றியக் குழுத் தலைவா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினா் அருண்பாண்டியன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மாரியம்மாள், ஆகாஷ், கஸ்தூரி, சுடலைமுத்து,சரஸ்வதி, ராமலட்சுமி,இசக்கியம்மாள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா். துணைத் தலைவா் ஞானக்கண் வரவேற்றாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மைதீன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.