ஒருங்கிணைந்த பண்ணையத் திட்ட விவசாயிகள் கூட்டம்
அம்பாசமுத்திரம் வட்டார ஒருங்கிணைந்த பண்ணையத் திட்ட விவசாயிகள் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


அம்பாசமுத்திரம் வட்டார ஒருங்கிணைந்த பண்ணையத் திட்ட விவசாயிகள் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சிவனுப்பாண்டியன் என்ற பரணி சேகா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் உள்ள விவசாயிகளில் வேளாண் துறை மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 50 விவசாயிகளுக்கு நெல் செயல் விளக்கத்திற்குத் தேவையான இடுபொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் பசுமைக் காடுகள் திட்டத்தின் கீழ் 50 விவாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி, வேளாண் அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...