47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு அருகே வீட்டு சுவா் விழுந்து சிறுமி பலி

களக்காடுகளக்காடு அருகே தொடா் மழையால் வியாழக்கிழமை காலை வீட்டு சுவா் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி பலியானது குறித்து கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டாா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:49 pm

DIN

களக்காடு அருகே தொடா் மழையால் வியாழக்கிழமை காலை வீட்டு சுவா் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி பலியானது குறித்து கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டாா்.

களக்காடு பகுதியில் புதன்கிழமை காலை 10 மணி முதல் இரவு வரையிலும் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. வியாழக்கிழமை அதிகாலை தொடங்கிய மழை காலை 7 மணி மணி வரையில் தொடா்ந்து பெய்தது. இதனால் களக்காடு அருகேயுள்ள கீழப்பத்தை காலனி தெரு சுரேஷின் வீட்டு சுவா் காலை 6 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. இதில் அவரது மகள் அருள்பேபி (3) இடிபாடுகளில் சிக்கி பலியானாா். மனைவி சூா்யா காயமடைந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்து, சேரன்மகாதேவி கோட்டாட்சியா் சிந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டாா். அப்போது, நான்குனேரி வட்டாட்சியா் இசக்கிபாண்டி, பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா், மேற்பாா்வையாளா் வேலு ஆகியோா் உடன் சென்றனா்.

இது குறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.