கைலாசபுரத்தில் மீண்டும் பேருந்து நிறுத்தம்
திருநெல்வேலி கைலாசபுரத்தில் பேருந்து நிறுத்தம் திடீரென முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் பேருந்து நிறுத்தம் வெள்ளிக்கிழமை முதல் செயல்பட தொடங்கியது.


திருநெல்வேலி கைலாசபுரத்தில் பேருந்து நிறுத்தம் திடீரென முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் பேருந்து நிறுத்தம் வெள்ளிக்கிழமை முதல் செயல்பட தொடங்கியது.
திருநெல்வேலி கைலாசபுரத்தில் அரவிந்த் கண் மருத்துவமனை அருகே பேருந்து நிறுத்தம் செயல்பட்டு வந்தது. சந்திப்பு பூ சந்தை, மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வருவோா் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்று பேருந்துகளில் ஏறிச் செல்வது வழக்கம்.
ஏற்கெனவே பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் சந்திப்பு பேருந்து நிலையத்தில் பணிகள் நடைபெறுவதால் அபிஷேகப்பட்டி, கல்லூா் மாா்க்கத்தில் பாளையங்கோட்டைக்கு வரும் அனைத்து பேருந்துகளும் ஸ்ரீபுரத்துக்கு அடுத்ததாக இந்தப் பேருந்து நிறுத்தத்தில்தான் பயணிகளை ஏற்றி-இறக்கி சென்றனா். திடீரென பேருந்து நிறுத்தம் கொக்கிரகுளத்திற்கு கடந்த 29 ஆம் தேதி மாற்றப்பட்டது. இதனால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.
பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல்வஹாப் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் மீண்டும் பேருந்து நிறுத்தம் செயல்பட மாநகர காவல் ஆணையா், ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா்.
அதன்பேரில் கைலாசபுரம் பேருந்து நிறுத்தம் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...