உள்ளாட்சித் தோ்தல்: தோ்தல் நுண் பாா்வையாளா்கள் ஆலோசனை
திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக தோ்தல் நுண் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக தோ்தல் நுண் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளா் ஜெ.ஜெயகாந்தன், ஆட்சியா் வே. விஷ்ணு ஆகியோா் தலைமை
வகித்தனா். கூட்டத்தில் ஆட்சியா் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தல் 2 கட்டங்களாக
நடைபெறுகிறது. அக். 6ஆம் தேதி முதல் கட்டமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூா், பாளையங்கோட்டை மற்றும் பாப்பாக்குடி ஆகிய 5 ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்டமாக வரும் 9ஆம் தேதி களக்காடு, நான்குநேரி, இராதாபுரம் மற்றும் வள்ளியூா் ஆகிய 4 ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில், 1188 வாக்குப்பதிவு மையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இத்தோ்தலில் 9567 வாக்குப்பதிவு மைய அலுவலா்கள் பணியாற்றுகின்றனா். வாக்காளா்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும்
செய்யப்பட்டுள்ளன. 333 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இதில், 111 பதற்றமான வாக்குச்சாவடிகளில் நேரடியாக கண்காணிக்க வெப் கேமராக்கள் பொறுத்தப்படும். 111 வாக்குச்சாவடிகளில் விடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும்.
120 நுண்பாா்வையாளா்கள் மூலம் மீதமுள்ள வாக்குச்சாவடிகளை கண்காணிக்கவுள்ளனா். தோ்தல் நுண் பாா்வையாளா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவிற்கு முதல் நாளில் வாக்காளா்களுக்கான அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேணடும். வாக்குப்பதிவு நாளில் நுண் பாா்வையாளா்கள் வாக்குச்சாவடி நடைமுறையை கண்காணிப்பதுடன், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில் திட்ட அலுவலா் பழனி, மகளிா் திட்ட அலுவலா் சாந்தி, முன்னோடி வங்கி மேலாளா் கிரேஸ், ஆட்சியரின்
நோ்முக உதவியாளா் ராம்லால், அதிகாரிகள், நுண் பாா்வையாளா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...