மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆலங்குளம் அருகே விபத்தில் கல்லூரி மாணவா் பலி

ஆலங்குளம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:37 pm

DIN

ஆலங்குளம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி மேலதெருவைச் சோ்ந்த முருகன் மகன் ஜெயச்சந்திரன் (20). சென்னையில் உள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்தாா். விடுமுறைக்காக புதன்கிழமை திருநெல்வேலி

வந்த அவா் அங்கு தனது நண்பா் வீட்டில் தங்கியுள்ளாா். வியாழக்கிழமை காலையில் பெத்தநாடாா்பட்டி செல்வதற்காக

மோட்டாா் சைக்கிளில் சென்றபோது சீதபற்பநல்லூா் அடுத்த புதூா் அருகில் ஆலங்குளம் வேல்முருகன் ஓட்டி வந்த

சரக்கு வாகனத்தில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சீதபற்பநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.