இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின்னா் அவா் கூறியது: கனமழையால் கடையநல்லுாா் தொகுதியில் புளியரை, தாட்கோ நகா், சின்னக்குற்றாலம், மேக்கரை, வடகரை, சின்னக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. ஓா் ஏக்கா் நெல் பயிரிட சராசரியாக ரூ. 25 ஆயிரம் செலவாகும். இதைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க வேண்டும். இதேபோல, மாவட்டத்தில் வாசுதேவநல்லுாா், புளியங்குடி உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைக் கண்டறிந்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.