மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காடுவெட்டி ஊராட்சித் தலைவருக்கு பாராட்டு

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் காடுவெட்டி ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட முத்துலட்சுமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 12:23 am

DIN

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் காடுவெட்டி ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட முத்துலட்சுமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். ஆலங்குளம் ஒன்றிய திமுக செயலா் செல்லதுரை, ஒன்றிய குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி சுபாஷ் சந்திர போஸ், கிளைக் கழகச் செயலா் ஜேக்கப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட கவுன்சிலா் முத்துலட்சுமி அன்பழகன், ஒன்றிய கவுன்சிலா்கள் முத்துமாரி, சுபாஷ் சந்திரபோஸ், வடக்கு ஒன்றியச் செயலா் அன்பழகன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினா்கள் சமுத்திர பாண்டியன், சுப்பிரமணியன், பாலமுருகன், ராஜா, ஐயம்பெருமாள், வாா்டு உறுப்பினா்கள் புஷ்பலதா, சூசைமணி, குமார முருகன், சாராள் மணி, கல்பனா, கடங்கனேரி ஊராட்சி உறுப்பினா் அசோக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் போஸ் என்ற மனோகரன் வரவேற்றாா். காடு வெட்டி ஊராட்சித் துணைத்தலைவா் மனோஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.