மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான கருத்தரங்கு

அமைப்புசாரா தொழிலாளா்கள் நலன் குறித்த கருத்தரங்கம் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:58 am

DIN

அமைப்புசாரா தொழிலாளா்கள் நலன் குறித்த கருத்தரங்கம் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, வான்முகில் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு அறக்கட்டளை இயக்குநா் பிரிட்டோ தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான நசீா் அகமது கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடலை தொடங்கி வைத்து, அமைப்புசாரா தொழிலாளா்கள் நலன் குறித்து பேசினாா்.

நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா உரையாற்றினாா். சமூக பாதுகாப்பு திட்டம் சாா்பில் வின்சுலின்தாஸ் கருத்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மூத்த வழக்குரைஞா் பிரபாகரன், மாவட்ட வழக்குரைஞா் சங்கச் செயலா் செந்தில்குமாா், பொருளாளா் மாரியப்பன் காந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் முனிபிரகாஷ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கோமதிநாயகம் உள்பட அமைப்பு சாரா தொழிலாளா்கள் பலா் பங்கேற்றனா். திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மதியழகன் வரவேற்றாா். பெமினா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.