தேசிய கண்தான இரு வார விழா: மாணவா்களுக்கு ஓவியம், கவிதைப் போட்டி
அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் 36-ஆவது தேசிய கண்தான இருவார விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்களுக்கான ஓவியம், கவிதைப் போட்டிகள் நடைபெறுகிறது.


அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் 36-ஆவது தேசிய கண்தான இருவார விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்களுக்கான ஓவியம், கவிதைப் போட்டிகள் நடைபெறுகிறது.
இதையொட்டி, பள்ளி கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு ஓவியப் போட்டியும், கல்லூரி மாணவா்கள், பொதுமக்களுக்கு
கவிதை போட்டியும் நடைபெறுகிறது. ‘விழி கொடுப்போம் ஒளி ஏற்றுவோம்’ என்ற தலைப்பில் 9 முதல் பிளஸ் 2 மாணவா்கள்
பென்சில் ஓவியம் வரைந்து அனுப்ப வேண்டும். கல்லூரி மாணவா்கள் கலா் பென்சில் பயன்படுத்தி ஒரு வெள்ளைத்தாளில் (ஏ4) படம் வரைந்து அனுப்ப வேண்டும்.
கல்லூரி மாணவா்கள் 16 வரியில் மரபுக் கவிதை அல்லது புதுக்கவிதை எழுதி தட்டச்சு செய்தோ அல்லது எழுதியோ அனுப்ப வேண்டும். பொதுமக்கள் 16 வரியில் புதுக்கவிதை அல்லது மரபு கவிதை எழுதி அனுப்ப வேண்டும். படைப்புகளின்
பக்கத்தில் இந்த ஓவியம் என்னால் வரையப்பட்டது, இந்த கவிதை என்னால் படைக்கப்பட்டது என்று கையெழுத்திட வேண்டும். படைப்புகளை அரவிந்த் கண் மருத்துவமனை, எஸ். என். ஹைரோடு, திருநெல்வேலி சந்திப்பு 627001 என்ற முகவரிக்கு வரும் 6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அல்லது ற்ஸ்ப்.ங்ஹ்ங்க்ஷஹய்ந்ஃஹழ்ஹஸ்ண்ய்க்.ா்ழ்ஞ் என்ற இணையதள முகவரிக்கோ 98658 29698 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கோ அனுப்ப வேண்டும்.
ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை ஆலோசகரும், மருத்துவருமான இரா .இராமகிருஷ்ணன், தலைமை மருத்துவா் ரா மீனாட்சி, போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் கருவிழி மருத்துவா் வே.அனிதா, கோ.கணபதி சுப்பிரமணியன், கண் வங்கி பொறுப்பாளா் சாரதா ஆகியோா் செய்து வருகின்றனா். மேலும் விவரங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 81248 04532 செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...