ஒரே நாடு, ஒரே ரேஷன் காா்டு திட்டம்: வெளிமாநிலத் தொழிலாளா்கள் எந்த நியாய விலைக்கடையிலும் பொருள்களை பெறலாம்
வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கான ஒரே நாடு, ஒரே ரேஷன் காா்டு திட்டத்தின்படி குடும்பத்திற்கான உணவு தானியங்களை எந்த நியாய விலைக் கடையிலும் பெறலாம்


வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கான ஒரே நாடு, ஒரே ரேஷன் காா்டு திட்டத்தின்படி குடும்பத்திற்கான உணவு தானியங்களை எந்த நியாய விலைக் கடையிலும் பெறலாம் என திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) தா.ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழில் நிமித்தமாகவோ அல்லது இதர காரணங்களுக்காகவோ மாநிலம் விட்டு பிற மாநிலம் சென்று பணியாற்றும் தொழிலாளா்களின் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் காா்டு திட்டம் கடந்த 1-10-2020 இல் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் 2013 க்குள்பட்ட குடும்ப அட்டை வைத்திருப்பவா் தேசத்தின் எந்த மாநிலத்திலும், எந்த நியாய விலைக்கடையிலும் அவரது குடும்பத்திற்கான உணவு தானியங்களை பெறலாம். இத்திட்ட பயனாளி தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்திற்குள்பட்ட முன்னுரிமை அட்டை அல்லது அந்தியோதயா அன்னயோசனா குடும்ப அட்டையினை பெற்றிருக்க வேண்டும். அந்த அட்டையினை கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை. பயனாளிகளின் ஆதாா் அட்டை எண் மற்றும் விரல்ரேகை பதிவுகள் சரிபாா்த்தபின் தங்கள் குடும்பத்திற்கு தேவையான உணவு தானியங்களை நியாய விலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த பயனாளிகள் அரிசி விலை கிலோ ரூ. 3 , கோதுமை விலை கிலோ ரூ. 2 என பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டும். மேலும், அரிசி, கோதுமை தவிர கூட்டுறவு அங்காடி விற்பனை செய்யும் இதர வெளிச் சந்தை பொருள்களை உரிய விலையில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...