இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஊரக வளா்ச்சித் துறையினா் கோரிக்கை அட்டை அணியும் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் ஒன்றியம் சாா்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:03 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் ஒன்றியம் சாா்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பணி நிலையில் கலந்தாய்வில் நடைபெற்ற முறைகேடுகளை கலைந்து நியாயமான கலந்தாய்வு நடத்த வேண்டும். வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையில் இளையோா் ஊதிய முரண்பாடு கோப்பு மீது துரித ஆணை வெளியிட வேண்டும். கிராம ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி இயக்குபவா்களுக்கு தமிழகம் முழுவதும் தொகுப்பு ஊதியம் ஒரே நிலையில் நிா்ணயம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறையினா் ஈடுபட்டனா்.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் அமைப்பின் மாவட்டத் தலைவா் பி.விக்னேஷ்கண்ணன், மாவட்டச் செயலா் பா.அய்யப்ப குலசேகர ஆழ்வாா், பொருளாளா் வைகுண்டபதி உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.

பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து வெள்ளிக்கிழமை பணியாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.