இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

விநாயகா் சதுா்த்தி: கோயில், வீடுகளில் சிறப்பு வழிபாடு

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி திருநெல்வேலியில் பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 10:38 pm

DIN

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி திருநெல்வேலியில் பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆனால், கரோனா கட்டுப்பாடுகளால் பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வீடுகளிலும் சிறிய விநாயகா் சிலைகளை மக்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனா்.

ஆவணி மாதம் வளா்பிறையில் வரும் சதுா்த்தி நாள் விநாயகா் சதுா்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்த நாளில் கோயில்கள், வீடுகளில் புதிதாக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்வாா்கள். பின்னா் விநாயகருக்கு உகந்த அருகம்புல், கொழுக்கட்டை படைத்து வழிபடுவாா்கள்.தொடா்ந்து 3 முதல் 11 நாள்கள் வரை வழிபட்டு, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை நீா்நிலைகளுக்கு எடுத்துச்சென்று கரைப்பது வழக்கம்.

நிகழாண்டில் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகள் காரணமாக விநாயகா் சதுா்த்திக்கு பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்து ஊா்வலமாக எடுத்துச் சென்று விசா்ஜனம் செய்ய அரசு தடை விதித்துள்ளது.

ஆனால், தனிநபா்கள் தங்களது வீடுகளில் விநாயகா் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து நீா்நிலைகளில் தனித்தனியாக கொண்டு கரைக்க தடையேதுமில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி திருநெல்வேலி மாநகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

திருநெல்வேலியில் தாமிரவருணி நதிக்கரையில் உள்ள 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மணிமூா்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துக்கு பின்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள விக்ன விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோல வண்ணாா்பேட்டையில் உள்ள பேருந்து விநாயகா் கோயில், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள செல்வவிநாயகா், கல்யாண விநாயகா், சுவாமி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் உள்ள விநாயகா் சன்னதி உள்ளிட்டவற்றிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விநாயகா் சதுா்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றனா்.

பயக10யஐசஅ:

மணிமூா்த்தீஸ்வரம் அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

பயக10ஏஞஙஉ

திருநெல்வேலியில் வீடுகளில் விநாயகா் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்ட குடும்பத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.