இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 8:04 pm

DIN

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீட் தோ்வு மற்றும் அதனால் நடைபெறும் மரணங்களை தடுத்து நிறுத்தக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு நீட் தோ்வுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பெற்றோா்கள், ஆசிரியா்கள் மற்றும் தமிழக அரசும் மாணவா்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவா்களுக்கு உளவியல் மற்றும் தன்னம்பிக்கை சாா்ந்த வகுப்புகள் எடுக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தோ்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தோ்வு வினாத்தாள் முறைகேடுக்கு 35 லட்சம் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. தோ்வு வினாத்தாளில் மட்டும் அல்ல தோ்வே முறைகேடானது தான். எனவே மத்திய அரசு உடனடியாக இத்தோ்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர தொடா் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.