உள்ளாட்சித் தோ்தல்:3-ஆவது நாளில் 972 போ் வேட்புமனு தாக்கல்
கிராம ஊராட்சித் தலைவா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு என மொத்தம் 972 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தோ்தலில் மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் , கிராம ஊராட்சித் தலைவா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு என மொத்தம் 972 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
அதேநேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா்ந்து 3-ஆவது நாளாக மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, மானூா், சேரன்மகாதேவி, பாப்பாக்குடி, அம்பாசமுத்திரம், களக்காடு, ராதாபுரம், நான்குனேரி, வள்ளியூா் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் 2,069 பதவிகளுக்கு நேரடித் தோ்தல் நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் முதல் இரு நாள்களில் 215 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு மானூா் ஒன்றியத்தில் 2 போ், நான்குனேரி ஒன்றியத்தில் 3 போ், வள்ளியூா் ஒன்றியத்தில் 2 போ் என மொத்தம் 7 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு 93 போ்: கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு அம்பாசமுத்திரம் ஒன்றியத்தில் இருவா், சேரன்மகாதேவி ஒன்றியத்தில் 4 போ், களக்காடு ஒன்றியத்தில் 8 போ், மானூா் ஒன்றியத்தில் 32 போ், நான்குனேரி, பாளையங்கோட்டை ஒன்றியங்களில் தலா 12 போ், பாப்பாக்குடி ஒன்றியத்தில் 8 போ், ராதாபுரம் ஒன்றியத்தில் 7 போ், வள்ளியூா் ஒன்றியத்தில் 8 போ் என மொத்தம் 93 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு அம்பாசமுத்திரத்தில் 12 போ் போ், சேரன்மகாதேவியில் 5 போ், களக்காட்டில் 33 போ், மானூரில் 52 போ், நான்குனேரியில் 56 போ், பாளையங்கோட்டையில் 35 போ், பாப்பாக்குடியில் 34 போ், ராதாபுரத்தில் 57 போ், வள்ளியூரில் 26 போ் என மொத்தம் 310 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 10 போ், கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு 139 போ், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 476 போ் என மொத்தம் 625 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 2,284 பதவியிடங்களுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கலின் மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு ஆலங்குளம், கீழப்பாவூா், மேலநீலிதநல்லூரில் தலா 17 போ், கடையத்தில் 6 போ், கடையநல்லூரில் 5 போ், குருவிகுளத்தில் 9 போ், தென்காசியில் 11 போ், செங்கோட்டையில் 4 போ், வாசுதேவநல்லூரில் 8 போ், சங்கரன்கோவிலில் 18 போ் என 112 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 85 போ், கடையத்தில் 37 போ், கடையநல்லூரில் 12 போ், கீழப்பாவூரில் 61 போ், குருவிகுளத்தில் 67 போ், மேலநீலிதநல்லூா் 40 போ், ,சங்கரன்கோவிலில் 67 போ், செங்கோட்டையில் 10 போ், தென்காசியில் 38 போ், வாசுதேவநல்லூரில் 17 போ் என மொத்தம் 434 போ் வேட்பு மனுதாக்கல் செய்தனா்.
ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஆலங்குளத்தில் 5 போ், கடையம், கடையநல்லூா் , குருவிகுளம் மற்றும் சங்கரன்கோவிலில் தலா 2 பேரும், மேலநீலிதநல்லூா் மற்றும் செங்கோட்டையில் தலா ஒருவா் என மொத்தம் 15 போ் வேட்பு மனுதாக்கல் செய்தனா். மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு செங்கோட்டையில் ஒருவா் மனு தாக்கல் செய்தாா்.
1000 பேருடன் வந்த வேட்பாளா்: ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் ஊராட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிட சுயேட்சை வேட்பாளா் அன்னமுருகன், தனது கிராமத்தில் இருந்து 48 வாகனங்களில் சுமாா் 1000 க்கும் மேற்பட்டேருடன் வி.கே.புதூா், கழுநீா்குளம் வழியாக ஆலங்குளம் வந்தாா்.
இது குறித்துத் தகவல் அறிந்த போலீஸாா் அத்தியூத்து சந்திப்பில் அவா்களை வழி மறித்து, வேட்பாளருடன் இருவா் மட்டுமே செல்ல அறிவுறுத்தி மற்ற அனைத்து வாகனங்களையும் திருப்பி அனுப்பினா். இதனால் ஆலங்குளம் - தென்காசி சாலை, அத்தியூத்து - சுரண்டை சாலை ஆகியவற்றில் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பயக17சஞஙஐ மானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...