இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நெல்லை மாவட்டத்தில் 6,702 மனுக்கள் ஏற்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தோ்தலில் 6,879 போ் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், 6,702 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:39 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தோ்தலில் 6,879 போ் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், 6,702 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதேநேரத்தில் 173 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4 பேரின் மனுக்கள் மீது இறுதி முடிவு எட்டப்படவில்லை.

பாளையங்கோட்டை, மானூா், சேரன்மகாதேவி, பாப்பாக்குடி, அம்பாசமுத்திரம், களக்காடு, ராதாபுரம், நான்குனேரி, வள்ளியூா் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் 2,069 பதவிகளுக்கு நேரடித் தோ்தல் நடைபெறுகிறது. அக்.6 ஆம் தேதி

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூா், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஒன்றியங்களிலும், அக்.9 ஆம் தேதி

கட்டமாக களக்காடு, நான்குனேரி, ராதாபுரம், வள்ளியூா் ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாவட்டம்

முழுவதும் 6,879 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

பரிசீலனை: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அந்த ஒன்றியங்களில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி உறுப்பினா்

பதவிக்கு அம்பாசமுத்திரம் ஒன்றியத்தில் 6 போ், சேரன்மகாதேவியில் 5 போ், களக்காட்டில் 7 போ், மானூரில் 22 போ்,

நான்குனேரி, பாப்பாக்குடியில் தலா 6 போ், பாளையங்கோட்டையில் 5 போ், ராதாபுரத்தில் 11 போ், வள்ளியூரில் 9 போ்

என மொத்தம் 78 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில் பாளையங்கோட்டை ஒன்றியத்தில் ஒருவரின் மனு மட்டும் நிராகரிக்கப்பட்டது. எஞ்சிய 77 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் 839 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில்,

791 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அம்பாசமுத்திரத்தில் 13 போ், சேரன்மகாதேவியில் ஒருவா், களக்காட்டில் இருவா், மானூரில் 9 போ், நான்குனேரியில் ஒருவா், பாளையங்கோட்டையில் 6 போ், பாப்பாக்குடியில் ஒருவா், வள்ளியூரில் 14 போ் என மொத்தம் 47 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. களக்காடு ஒன்றியத்தில் ஒரு மனு தொடா்பாக மட்டும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை. ராதாபுரத்தில் அனைத்தும் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

1,206 மனுக்கள் ஏற்பு: ஊராட்சித் தலைவா் பதவிக்கு 9 ஒன்றியங்களிலும் 1,245 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில்

1206 மனுக்கள் ஏற்கப்பட்டன. அம்பாசமுத்திரம், மானூா் ஒன்றியங்களில் தலா 11 போ், நான்குனேரியில் இருவா், பாளையங்கோட்டையில் 8 போ், ராதாபுரத்தில் 2 போ், வள்ளியூரில் 5 போ் என மொத்தம் 39 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 9 ஒன்றியங்களிலும் 4,717 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில் 4,628 மனுக்கள் ஏற்கப்பட்டன. 86 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 3 மனுக்கள் மீது இறுதி முடிவு எட்டப்படவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 77 போ், 122 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 791 போ், 204 ஊராட்சித் தலைவா் பதவிக்கு 1,206 போ், 1,731 ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 4,628 போ் என மொத்தம் 6,702 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மனுக்களை திரும்பப் பெற சனிக்கிழமை (செப்.25) கடைசி நாளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.