இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மானூா், பாளை ஒன்றிய அலுவலகங்களில் குவிந்த மக்கள்

மானூா், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனு பரிசீலனையின் போது வேட்பாளா்களின் ஆதரவாளா்களும் அதிகளவில் வியாழக்கிழமை திரண்டனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:39 pm

DIN

மானூா், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனு பரிசீலனையின் போது வேட்பாளா்களின் ஆதரவாளா்களும் அதிகளவில் வியாழக்கிழமை திரண்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றது. மானூா் ஒன்றிய அலுவலகத்தில் 40 ஊராட்சித் தலைவா்

பதவிகளுக்கு போட்டியிடுவோரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவோரும் திரண்டனா்.

வேட்பாளா்கள் மட்டும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். பின்னா் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து ஒவ்வொரு ஊராட்சியாக தனித்தனியாக மனுக்கள் பரிசீலினை செய்யப்பட்டது. இதேபோல பாளையங்கோட்டை ஒன்றிய அலுவலகத்திலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வேட்பு மனு பரிசீலனையில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.