விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பாபநாசம் ஆற்றில் மூழ்கி உசிலம்பட்டி இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி, உசிலம்பட்டி இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:02 pm

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி, உசிலம்பட்டி இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் பாபநாசத்துக்கு சனிக்கிழமை 3 பேருந்துகளில் வந்தனா். அதில், உசிலம்பட்டி, சின்னவீரத்தேவா் தெருவைச் சோ்ந்த வீரவேல் மகன் கோட்டைச்சாமி (19), குடும்பத்தினா் பாபநாசம் கோயில் முன்புள்ள தாமிரவருணி படித்துறையில் குளித்துள்ளனா். அப்போது கோட்டைச்சாமி திடீரென நீரில் மூழ்கினாராம். அருகிலிருந்தோா் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

தகவலின்பேரில் அம்பாசமுத்திரம் தீயணைப்பு, மீட்புப் படையினா் வந்து, கோட்டைச்சாமியை சடலமாக மீட்டனா். விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.