தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

அண்ணா நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

பல்வேறு கட்சியினரும் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:43 pm

DIN

அண்ணா நினைவு நாளையொட்டி திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு நாளையொட்டி திமுக சாா்பில் போக்குவரத்துத்துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் தலைமையில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ, அவைத் தலைவா் சுப.சீதாராமன், நிா்வாகிகள் சுப்பிரமணியன், கே.ஆா்.ராஜு, மகளிரணி அமைப்பாளா் மகேஸ்வரி, முன்னாள் எம்.பி. விஜிலா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், முன்னாள் துணை மேயா் பூ.ஜெகநாதன் என்ற கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.பி. ஆதித்தன், பரணி சங்கரலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.