அம்பையில் கட்டடத் தொழிலாளி மரணம்:மனைவி கைது
அம்பாசமுத்திரத்தில் கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக, அவரது மனைவியை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.


அம்பாசமுத்திரத்தில் கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக, அவரது மனைவியை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் பேச்சிமுத்து (28). கட்டடத் தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சுதா என்பவருக்கும் திருமணமாகி முடப்பாலம் பகுதியில் வசித்து வந்தனா். தம்பதிக்கு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை பேச்சிமுத்து மாரடைப்பால் உயிரிழந்ததாக சுதா தெரிவித்தாராம். தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் பேச்சிமுத்து கழுத்தை நெரித்ததற்கான அடையாளம் இருந்ததையடுத்து, போலீஸாா் சுதாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...