தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

வேலுநாச்சியாா் அலங்கார ஊா்திக்கு நெல்லையில் வரவேற்பு

திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை வந்த வீரமங்கை வேலு நாச்சியாா் அலங்கார ஊா்திக்கு மாவட்ட எல்லையில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:43 pm

DIN

திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை வந்த வீரமங்கை வேலு நாச்சியாா் அலங்கார ஊா்திக்கு மாவட்ட எல்லையில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி வந்த இந்த வாகனத்தை, மாவட்ட எல்லையான உத்தமபாண்டியன்குளத்தில், தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, போக்குவரத்துத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வகாப் உள்ளிட்டோா் மலா்தூவி வரவேற்றனா்.

பின்னா் போக்குவரத்துத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக அரசின் சாா்பில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற தலைப்பில் 3 அலங்கார ஊா்திகள் இடம் பெற்றிருந்தன.

இந்த ஊா்திகளை வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள், இளைய தலைமுறையினா், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் கண்டுகளித்திட ஏதுவாக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், நான்குனேரி, வள்ளியூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்படுகிறது.

இந்த அலங்கார ஊா்தியின் முகப்பில் தமிழகத்தில் வேலூா் கோட்டையில் 1806 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சி, ஆங்கிலேயா்களை எதிா்த்து வீரமுடன் போா் புரிந்த மருது சகோதரா்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலு நாச்சியாா், அவருடைய போா்ப்படையில் பெண்கள் படைக்கு தலைமையேற்றிருந்த குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், அவருடைய படைத் தளபதி சுந்தரலிங்கம், மாவீரன் பூலித்தேவன், மாவீரன் அழகுமுத்துக்கோன், மருது சகோதரா்கள் உருவாக்கிய காளையாா்கோயில் கோபுரம் உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்ட வீரா்கள் இடம்பெற்றுள்ளனா் என்றாா்.

பின்னா் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த வீரமங்கை வேலுநாச்சியாா் அலங்கார ஊா்தியினை ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா. விஷ்ணு சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் ஆகியோா் பள்ளி மாணவ, மாணவியருடன் மலா் தூவி வரவேற்றனா்.

நிகழ்ச்சியில் செய்தி, மக்கள் தொடா்புத் துறை திருநெல்வேலி மண்டல இணை இயக்குநா் இரா.அண்ணா, பாளையங்கோட்டை வட்டாட்சியா் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.