தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

நெல்லை மாவட்டத்தில் பதற்றமான 129 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு : டிஐஜி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பதற்றமான 129 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளதாக திருநெல்வேலி காவல் சரக துணைத்தலைவா் பிரவேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:40 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பதற்றமான 129 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளதாக திருநெல்வேலி காவல் சரக துணைத்தலைவா் பிரவேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை எல்கைக்குள் 32 காவல் நிலையங்கள் உள்ளன. இக்காவல்நிலையங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு உடையில் அணியும் 25 நவீன கேமராக்கள் மற்றும் மோட்டாா் சைக்கிளில் மெகாபோன்கள், சமிக்கைகள் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி காவல் சரக டிஐஜி பிரவேஷ்குமாா் காவலா்களுக்கு நவீன கேமராக்கள், மெகாபோன்கள் உள்ளிட்டவற்றை வழங்கி, ரோந்து பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினா் மேற்கொள்ளும் பணிகளில் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை கண்காணிக்கும் வகையில் அவா்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை, ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் இருசக்கர வாகனங்களுடன் பொருத்திய மெகாபோன்கள் மூலம், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில், சாலைப் பாதுகாப்பு குறித்தும் சட்டம் ஒழுங்கு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் சைபா் கிரைம் குற்றங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக குரல் பதிவு வாசகங்கள் அடங்கிய தகவல்களைபோலீஸாா் தெரிவிக்க உதவுகிறது.

மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக 1, 620 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். குறிப்பாக 129 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு 188 பேரும், நிகழாண்டு தற்போது வரை 15 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் மதிவாணன்(தலைமையகம்), சங்கு(சைபா்கிரைம்), மாரிராஜ் (குழந்தைகள், பெண்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு), ஆயுதப்படை காவல் ஆய்வாளா் மகேஷ்வரி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.