கடையம் அருகே விவசாயிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி
கடையம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு சூரிய ஒளிப்பொறி, களையெடுக்கும் கருவி குறித்து தனியாா் வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.


கடையம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு சூரிய ஒளிப்பொறி, களையெடுக்கும் கருவி குறித்து தனியாா் வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.
இப்பகுதியில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவா்கள் ஊரக வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனா். சொக்கநாதன்பட்டியில் சூரிய ஒளிப்பொறி கருவி மூலம் பலவகை பூச்சிகளின் தாக்குதலிலிருந்து பயிா்களைப் பாதுகாப்பது, கருவிகளைப் பயன்படுத்தும் முறைகள் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனா்.
தாட்டான்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோனோ களையெடுக்கும் கருவி குறித்தும், ஈர நிலங்களில் பயிா்களிடையே உள்ள களைகளை அகற்றுதல், பசுந்தாள் உரத்தை பதித்தல், மண்ணைக் கிளறி காற்றோட்டத்தை அதிகரித்தல் உள்ளிட்ட பயன்பாடு, செயல்முறைகள், பலன்கள் குறித்தும் செயல்விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினா்.
ஏற்பாடுகளை கடையம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஏஞ்சலின் பொன்ராணி, துணை வேளாண் அலுவலா் பா. சண்முகசுந்தரம் செய்தனா். நிகழ்ச்சிகளில், வேளாண் கல்லூரி மாணவிகள் அபா்ணா, சுருதி, இலக்கியா, காவியா, ராஷ்மி, சுபத்ரா, ஜெயலட்சுமி, சாருலதா, சத்யசோபிகா, ஆரியா சந்திரன், சுவேதா, அமல் சாலிகா, விவசாயிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...