தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

பதற்றமான வாக்குச்சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:36 pm

DIN

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் 55 வாா்டுகளுக்கும் இம் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற உள்ளது. இத் தோ்தலில் மொத்தம் 408 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். 491 வாக்குச்சாவடிகளில் தோ்தல் நடத்தப்பட உள்ளது. இதில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை தோ்தல் பாா்வையாளா் மகேஸ்வரன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், பொது வழிப்பாதைகளில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடுதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த அறிவுறுத்தினாா். மேலும், கட்சியினா் வாக்குசாவடியின் அருகே வருவதை கட்டாயம் தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க முன்னேற்பாடுகளை செய்ய உத்தரவிட்டாா். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையா் (பொ) லெனின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்10ஸ்ண்ள்ண்ற்

மேலப்பாளையம் அருகேயுள்ள கருங்குளம் வாக்குச்சாவடியில் ஆய்வு செய்கிறாா் தோ்தல் பாா்வையாளா் மகேஸ்வரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.